திருவண்ணாமலை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில், வடக்கு மண்டல மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சார்லஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
மாநாட்டில் ஊராட்சி செயலர்களுக்கு அரசு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். ஊராட்சியில் பணியாற்றிவரும் தூய்மை காவலர்களுக்கு மாதம் 5ஆயிரம் சம்பளம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற மாநாட்டிற்கு பல்வேறு மாவட்டத்தில் இருந்து சுமார் 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து பணியாளர் சங்கத்தினரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சிறுவர்கள் முழக்கம் - ஆர்ப்பரிப்பில் போராட்டக்காரர்கள்