ETV Bharat / state

திருவண்ணாமலை சாமியார்களுக்குப் புதிதாக அடையாள அட்டை வழங்கும் பணிகள் தொடக்கம்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களின் குற்றப் பின்னணியை ஆய்வு செய்து, புதிதாக அடையாள அட்டை வழங்கும் பணிகளை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை சாமியார்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்குதல்- கண்காணிப்பாளர் கார்த்திகேயன்

author img

By

Published : Sep 21, 2022, 7:38 PM IST

Updated : Sep 21, 2022, 11:03 PM IST

திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் சாதுக்கள் என்ற போர்வையில் போலி சாமியார்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததாகவும் கள்ளச்சாராய பாக்கெட்டுகள் சிதறிக்கிடப்பது குறித்தும் கிடைத்த தகவலின் அடிப்படையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சாராயம் விற்பவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்த நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நம்பர் பிளேட் இல்லாத இரு சக்கர வாகனங்கள், முறையாக ஆவணங்கள் இல்லாத வாகனங்கள், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் அமர்ந்து செல்பவர்கள் என அனைத்து வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப் பதியப்பட்டு வருகிறது.

மேலும் கிரிவலப்பாதையில் தங்கி உள்ள சாதுக்களுக்குப் புதிதாக அடையாள அட்டை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில் இன்று (செப்.21) கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு புதிய அடையாள அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுவதை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் நேரடியாகப் பார்வையிட்டார். அப்போது சாமியார்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்றப்பின்னணியில் இருக்கிறார்களா? என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

மேலும் சாதுக்களிடம் ’உங்களோடு சாமியார் என்ற பெயரில் போலி சாமியார்கள் கஞ்சா, சாராயம், புகையிலை போன்ற போதை வஸ்துக்களைப் பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ விற்பவர்களை காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச அலைபேசி எண் 91596 16263 என்ற எண்ணுக்கு அழைத்துப் புகார் தெரிவிக்கலாம்’ என்று தெரிவித்தார்.

மேலும் சாதுக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் அமைத்து தந்தால், அங்கு தங்குவீர்களா என்று கேட்டறிந்தார். மேலும் சாதுக்களிடம் வேறு ஏதாவது உதவி வேண்டுமா என்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் கேட்டார்.

இரவு நேரத்தில் சாதுக்கள் தங்குவதற்கு இடவசதி செய்து கொடுப்பதற்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மருத்துவர் கார்த்திகேயனுக்கு சாதுக்கள் நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:கோயிலில் ஆபாசப்படம் பார்த்த இளைஞர் தப்பியோட்டம்; போலீஸ் வலைவீச்சு

Last Updated : Sep 21, 2022, 11:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.