திருவண்ணாமலை காமாட்சி அம்மன் கோயில் தெருவில் அருணா அண்ட் கோ என்ற மளிகைக்கடை உள்ளது. இந்த நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.
இந்த சோதனை, மளிகைக் கடையின் மூலம் வரும் வருமானத்திற்கு வருமான வரி சரியாக செலுத்தவில்லை என்ற அடிப்படையில் நடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
இதையடுத்து, வேலூரிலிருந்து வந்த பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை சிறப்பு அதிகாரிகள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனை முடிந்து அதிகாரிகள் தரப்பில் இருந்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்னரே, முழுமையான விவரங்கள் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.