கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், திருவண்ணாமலை நகரின் பூத நாராயணர் கோயில் அருகே ஊரடங்கு தடையை மீறி நகரில் சுற்றித் திரிபவர்களை கட்டுப்படுத்தும்விதமாக இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள் முதல் இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டபோதிலும், சில நாள்களில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் திருப்பி அளிக்கப்படுவதால் வாகனங்களின் நடமாட்டம் மீண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எனவே, இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக இருசக்கர வாகனங்கள் பிடிபடும்போது, வாகனத்தில் வருபவர்களுக்கு நூறு ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறையை திருவண்ணாமலை நகர போக்குவரத்து காவல் ஆய்வாளர் செயல்படுத்திவருகிறார். அவரது நடவடிக்கையின் மூலம் நோய்த் தொற்று கட்டுக்குள்வரும் என எதிர்பார்க்கபப்டுகிறது.
இதையும் படிங்க: கிளியைக் கொண்டு டிக்டாக்! - அபராதம் விதித்த வனத் துறை