நாடெங்கும் கரோனா அச்சம் நாளுக்கு நாள் பெருகி வருவதன் காரணமாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து பசியும் பட்டினியுமாய் கடந்த நான்கு மாதங்களாக பெரும் துயரத்திற்கு ஆளாகி வருபவர்களில் பெரும்பாலானோர் தினக்கூலிகள்.
ஒரு நாள் கூலி வேலைக்கு செல்லவில்லை என்றால் கூட அவர்கள் சாப்பாட்டுக்கு கஷ்டப்படும் சூழல் உருவாகும் நிலையில், தற்போது கரோனா வைரஸின் தாக்கம் உச்சத்தை அடைந்து வரும் நிலையில், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக முடங்கிவிட்டது.
இதுபோன்று வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் ஏழை எளியோருக்கு, செங்கம் அடைக்கலநாதர் ஆலயத்தின் பேராயர் சாமுவேல் கென்னடி ஆலோசனைப்படி, செங்கம் குரு சேராயர் தலைமையில் ஒரு மாதத்திற்கு தேவையான அரிசி உள்ளிட்ட சிறப்பு நிவாரண தொகுப்பு வழங்கப்பட்டது. இந்த சிறப்பு தொகுப்பை செங்கம் காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஏழை எளியோருக்கு வழங்கினார்.