திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அரியாத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை தலைமையில் துணைத் தலைவர் நளினிமுருகேசன், முன்னிலையில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் நாகராஜன் வரவேற்பில் நடைபெற்றது.
இந்த மருந்துவ முகாமினை வட்டார மருத்துவ அலுவலர் பிரதீபா பிரியதர்ஷினி தொடங்கி வைத்தார். இந்த முகாமில் பெண்களுக்கு பொது மருத்துவம், பெண்கள் பொதுநலசிகிச்சை, சர்க்கரைநோய், ரத்த அழுத்தம், பல்மருத்துவம், கண்மருத்துவம் , காது, மூக்கு, தொண்டை, சிறப்பு மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டது.
மேலும் இசிஜி ஸ்கேன், ரத்தபரிசோதனை ஆய்வகம், ஆகியவை முகாமில் அமைக்கப்பட்டு இருந்தது. மேலும் இரண்டு பெண் குழந்தைகளுடன் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த தாயிக்கு மலர் கிரிடம் வைத்து வாழ்த்து தெரிவித்து ஊட்டச்சத்து கிப்ட்பாக்ஸினை மருத்துவக் அலுவலர் பிரதிபாபிரியதர்ஷினி வழங்கினார்.
பெண்கள் முகக்கவசம் அணிந்து வந்து சிகிச்சை பெற்றுசென்றனர். அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்த முகாமில் 1162 பேருக்கு மருத்துவர்கள், முகமது ரபீக், கோமதி, கோகுல்ராஜ், தமிழழகன், நிவேதா, விக்னேஷ்குமார், எழில்பிரியா, மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பாஸ்கரன் அந்தோணிராஜ், செவிலியர்கள் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்தனர்.