திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அடுத்த கங்கை சூடாமணி கிராமத்தில் செயல்படும் ஓர் தனியார் பள்ளியில் யுகேஜி படிக்கும் மாணவியை பள்ளியின் தாளாளர் பிரபாவதியின் கணவர் காமராஜ் என்ற அரசு பள்ளி ஆசிரியர் குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கூறப்பட்டுள்ளது.
குழந்தை வீட்டுக்குச் சென்ற போது அழுவதைக் கண்ட பெற்றோர் உடலை பரிசோதனை செய்தனர். அப்போது உடலில் காயங்கள் காணப்பட்டதால் அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனையில் பாலியல் தொந்தரவுக்குள்ளானது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து பள்ளிக்கு சேத்துப்பட்டு காவல்துறையினர் சென்று விசாரணை செய்த போது, காமராஜ் திருச்செந்தூர் சென்றதாக தெரியவந்தது. இதனையடுத்து, காவல்துறையினர் உடனடியாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து திருச்செந்தூர் செல்லும் வழியில் எட்டையாபுரம் காவல்துறையினர் காமராஜைக் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஓடும் ரயிலில் பெண் காவலருக்கு கத்தி குத்து... பகிரங்க வாக்குமூலம் கொடுத்த குற்றவாளி