ETV Bharat / state

'சத்துணவுத் திட்டத்தால் கல்வித்திறன் மேம்படுகிறது' - சேவூர் ராமச்சந்திரன் - Savur Ramachandran

திருவண்ணாமலை: சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கப்படுவதால் அவர்களின் கல்வித்தரம் மேம்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

சேவூர் ராமச்சந்திரன்
author img

By

Published : Jun 3, 2019, 8:21 AM IST

திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,666 சத்துணவு மையங்களுக்கு, 8.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார பெட்டகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுப் பணியாளர்களுக்கு வழங்கினார்.

பின்னர் பேசிய அவர், "சத்துணவு திட்டத்தின் மூலம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துமிக்க உணவு வழங்கப்படுவதால் அவர்களின் கல்வித் தரம் மேம்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, செய்யார் சட்டப்பேரவை உறுப்பினர் தூசி மோகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Intro:திருவண்ணாமலை மாவட்டத்தில் 1666 சத்துணவு மையங்களுக்கு 8.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார பெட்டகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

Body:திருவண்ணாமலை மாவட்டத்தில் 1666 சத்துணவு மையங்களுக்கு 8.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார பெட்டகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கினார்.

சுகாதாரப் பெட்டகத்தை வழங்கிய பின்னர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது,
பாரத ரத்னா புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களால் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் அனைத்து மாணவர்களுக்கும் மதிய உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சத்துணவு திட்டத்தை மேம்படுத்தி மாணவர்களுக்கு தினசரி முட்டையுடன் பல்வேறு வகைகளில் கலவை சாதம் வழங்கினார்கள்.

அம்மாவின் வழியில் தமிழக முதலமைச்சர் அவர்களும் தொடர்ந்து வழங்கி வருகிறார்கள்.

இத்திட்டத்தின் மூலம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு வழங்குவதன் மூலம் அவர்களின் கல்வித் தரம் மேம்பட்டுள்ளது.

பொருளாதாரத்தில் நலிவடைந்த குழந்தைகளுக்கு சத்தான உணவு கிடைத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் பள்ளி செல்லும் மாணவ மாணவிகள் கல்வி இடை நிறுத்தம் செய்வது முற்றிலும் தடுக்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது சத்துணவு திட்டத்தின் மூலம் இந்தியாவிலேயே முதன்முதலாக தமிழகத்தில் சத்துணவு மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 6 டெட்டால் சோப்பு, தலைக்கவசம், நகவெட்டி, 5 துண்டு , இரண்டு மேல் கவசம் ஆகியவை அடங்கிய சுகாதார பெட்டகம் வழங்கப்படுகிறது.

இதன் மூலம் சுத்தமான சுகாதாரமான முறையில் உணவு தயாரித்து மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி மற்றும் செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டத்தில் 1666 சத்துணவு மையங்களுக்கு 8.41 லட்சம் ரூபாய் மதிப்பிலான சுகாதார பெட்டகத்தை இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவு பணியாளர்களுக்கு வழங்கினார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.