ETV Bharat / state

'ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் ஓர் நாசகார சக்தி..!' - துரை வைகோ - ஆர் எஸ் எஸ்

மொழி கலாசாரம் மற்றும் மதத்தை வைத்துக்கொண்டு பாஜக ஒரே நாடு, ஒரே மொழி என்ற அடிப்படையில் பிரிவினைவாத அரசியலை மேற்கொண்டு வருகிறது என துரை வையாபுரி வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

’ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் ஓர் நாசசக்தி..!’ - துரை வைகோ

author img

By

Published : Oct 12, 2022, 6:52 AM IST

திருவண்ணாமலை: மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இணைந்து மதச்சார்பின்மையை பாதுகாக்கும் வகையில் மனித சங்கிலிப்போராட்டத்தை நேற்று நடத்தியது.

இதில் மதிமுக தலைமை கழகச்செயலாளர் துரை வையாபுரி வைகோ, திருவண்ணாமலையில் பங்கேற்று மனித சங்கிலி போராட்டத்தைத்தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்குப்பேட்டியளித்த துரை வையாபுரி வைகோ, 'மதத்தின் அடிப்படையில் பிரிவினைவாதிகளுக்கு நாங்கள் இடம் அளிக்க மாட்டோம் என்ற அடிப்படையில் மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் இணைந்து இந்த மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது.

ஆர்.எஸ்.எஸ் போன்ற அமைப்புகள் அல்ல, அவை நாட்டை மதத்தின் பெயரால் மக்களிடையே பிரிவினைகளை வளர்க்கும் நாசகார சக்திகள். மலிவான பிரிவினைவாத அரசியல்களை செய்து கொண்டிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை என்பதுதான் இந்தியாவின் அடையாளம். ஆனால், ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே கலாசாரம் என்று மலிவான பிரிவினையை செய்து கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

’ஆர்.எஸ்.எஸ் அமைப்பு மக்களிடையே பிரிவினையை வளர்க்கும் ஓர் நாசசக்தி..!’ - துரை வைகோ

இத்தகைய சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைக்கொண்டு வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார். உலகம் முழுவதும் ஆங்கிலம் ஒரு இணைப்பு மொழியாக உள்ள போது, அனைத்துத்துறைகளிலும் ஆங்கிலம் மொழி வாயிலாகத் தான் மாணவர்கள் பயின்று வரும் நிலையில், அந்த ஆங்கிலத்தை அகற்றிவிட்டால் மாணவர்களின் எதிர்காலம் மிகக்கடுமையாக பாதிப்படையும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவில் பெயர்களில் தனிநபர்கள் இணையதளங்களை நடத்த தடை - மதுரை நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.