திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் 39ஆவது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கபடாமல் இருந்து வந்துள்ளது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீருக்காக அலைமோதும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து சம்பந்தப்பட்ட அலுவலரிடம் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு முறையான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் எனக்கோரி அப்பகுதி பெண்கள், ஆண்கள், சிறுவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க:குடிநீர் விநியோகம் செய்யாததைக் கண்டித்து சாலை மறியல்!