மின் விநியோகங்களில் தனியார்மயத்தை புகுத்திடும் விதமாக முதல் கட்டமாக யூனியன் பிரதேசங்களில் தனியார்மயத்தை புகுத்திட மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து மாநிலங்களிலும் அடுத்து புகுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
இந்நிலையில், திருவண்ணாமலை நகரின் வேங்கிக்கால் பகுதியில் உள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிர்மான கழக உதவி செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு 30க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள், மின்விநியோகத்தை தனியார் மயமாக்குவதை கண்டித்து போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய, மாநில அரசுகள் மின்சார வாரியத்தில் தனியார் மயமாக்கி விவசாயிகளுக்கு இலவசமாக கொடுக்கப்படும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கும் செயல்களைக் கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தகுந்த இடைவெளியை கடைபிடித்தும் முகக் கவசங்கள் அணிந்தும் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இதையும் படிங்க: இலவச மின்சாரம் திட்டத்தை ரத்துசெய்வது விவசாயிகள் மேல் நடத்தப்படும் பேரிடர் தாக்குதல்' - ஸ்டாலின்