திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் 9 அடி உயர கருணாநிதியின் வெண்கல சிலையை வரும் 8ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்நிலையில் பாஜகமூத்த நிர்வாகி ஹெச். ராஜா இன்று (ஜூலை 04) பார்வையிட்டு அதனை பார்வையிட்டார்.
தனைத் தொடர்ந்து அண்ணாமலையார் கோயில் சிவான்ஜி குளத்தில் அமைந்துள்ள சிவன் கோயில் இடம் ஆக்கிரமிப்புகளையும் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த ஹெச். ராஜா, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வரக்கூடிய கிரிவலம் பாதையில் நாத்திகரான கருணாநிதியின் சிலை வைக்க கண்டனம் தெரிவித்தவர்.
இதுகுறித்து இந்து அமைப்புகளை கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அதேபோல் அண்ணா நுழைவாயில் என்ற பெயரை நீக்கிவிட்டு அண்ணாமலையார் நுழைவாயில் என பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் ஓடாத திருவாரூர் தேரை ஓட வைத்தவர் கருணாநிதி தான் என கேள்வி எழுப்பினர். இதனால் ஆத்திரமடைந்த ஹெச். ராஜா நீங்கள் அறிவாலய செய்தியாளரா? என கேள்வி எழுப்பினார்.
ராகுல் காந்தி எடப்பாடியிடம் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக சார்பில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் பாமக உள்ளிட்ட மற்றும் மாயாவதி, ஜெகன்மோகன் ரெட்டி பல்வேறு கட்சிகளின் ஆதரவு உள்ளதால் கூட்டணி கட்சி வாக்கை விட ஒன்றரை மடங்கு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என தெரிவித்தார்.
கிரிவலப் பாதையில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான இடங்களை தனியார் அமைப்புகள் ஆக்கிரமித்து வணிக வளாகங்கள் கட்டடம் கட்டி உள்ளதாகவும், இதனை உடனடியாக மீட்க வேண்டும் என இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபுவை அவர் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: முதலீட்டாளர்கள் மாநாடு - 60 திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்