ETV Bharat / state

திருவண்ணாமலை தீர்த்தக் குளம் சீரமைப்பு: தூர்வாரும் பணியை ஆய்வு செய்த அமைச்சர் எ.வ.வேலு! - minister of public works EV Velu

திருவண்ணாமலை 5 தீர்த்தக் குளங்களில் ஒன்றான ஐயங்குளத்தை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுப்பணித் துறை அமைச்சர் ஏ.வ.வேலு சீரமைக்கும் பணிகளை இன்று ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை தீர்த்தக் குளங்கள் சீரமைப்பு

author img

By

Published : Jun 25, 2023, 5:18 PM IST

திருவண்ணாமலை தீர்த்தக் குளங்கள் சீரமைப்பு

திருவண்ணாமலை: மாதந்தோறும் பெளவர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அண்ணாமலையார் சிவாலயத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வழிபாட்டுக்கு வருவது வழக்கம். வழிபாட்டின் ஒரு சிறப்பு அம்சமாக, தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 14 கி.மீ தூரத்திற்கு நடந்து மலையைச் சுற்றி கிரிவலம் வருவது காலம் காலமாக நடந்து வருகிறது. மலையைச் சுற்றி பஞ்ச தீர்த்த குளங்கள் என அழைக்கப்படும் ஐந்து குளங்கள் அமைந்துள்ளது. ஈசானியா குளம், தாமரைக்குளம், ஐயங்குளம் மற்றும் அண்ணாமலையார் திருக்கோவிலின் உள்ளே அமைந்துள்ள சிவகங்கை தீர்த்தம் மற்றும் பிரம்ம தீர்த்த குளம் ஆகிய 5 தீர்த்த குளங்கள் அமைந்துள்ளது.

இந்த தீர்த்த குளங்களில் அண்ணாமலையாருக்கு வருடத்தில் பல்வேறு விஷேச நாட்களில் தீர்த்த வாரி திருவிழாக்கள் மேற்கொள்ப்படும். குறிப்பாக திருவண்ணாமலை ஐய்யங்குள தெருவில் அமைந்துள்ள ஐய்யங்குளத்தில் ஆண்டுக்கு மூன்று முறை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடைபெறும். மேலும் கார்த்திகை தீபத் திருவிழா உற்சவத்தின் போது மூன்று நாட்கள் இந்த ஐயங்குளத்தில் சந்திரசேகர், முருகர் மற்றும் பராசக்தி அம்மனின் தெப்பல் பவனி உற்சவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த குளத்தில் அதிக அளவில் சேறு படிந்து உள்ளதாலும், குளத்தில் படர் கொடிகள் அதிக அளவில் முளைத்து குளம் முழுவதும் படர்ந்து உள்ளதாலும் குளத்தின் தண்ணீரின் தன்மை மிகவும் மாசுபட்டு உள்ளது. இதனையடுத்து இந்த தீர்த்த குளத்தில் உள்ள சேற்றை தூர்வாரி, குளக்கரைகளை சீரமைக்கும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஐயங்குளத்தில் உள்ள தண்ணீரை ராட்சத மோட்டார்கள் மூலம் குளத்தில் நிறைந்திருந்த தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டதனை அடுத்து நாளை முதல் குளத்தில் உள்ள சேற்று மணலை தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குளத்தின் உள்ளே தண்ணீர் வரும் பாதை மற்றும் குளத்திற்கு வெளியே தண்ணீர் போகும் பாதை ஆகிய பாதைகளை சீரமைத்து, பொதுமக்கள் நடைப்பயிற்சியில் ஈடுபடும் வகையில் கரைகளை சீர்படுத்தும் பணிகள் போன்ற பல்வேறு கட்ட வளர்ச்சி திட்டங்களை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சீரமைக்கும் பணிகள் நடைபெறும் இந்த தீர்த்தக் குளத்தை இன்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர். குளத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றிய நிலையில் நாளை முதல் ஐய்யங்குள தீத்தக்குளத்தை முற்றிலும் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும், வெகு விரைவில் குளத்தை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் முடிவடையும் என பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.