ETV Bharat / state

திருவண்ணாமலையில் பெளர்ணமி கிரிவலம் செல்லத் தடை! - Prohibition to go to Tiruvannamalai Kirivalam

திருவண்ணாமலை: உலகப் பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் வரும் 4ஆம் தேதி ஆனி மாத பெளர்ணமி அன்று கிரிவலம் செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Prohibition to go to Tiruvannamalai Kirivalam

author img

By

Published : Jul 3, 2020, 6:25 AM IST

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயில் அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோ மீட்டர் தொலைவுள்ள கிரிவலப் பாதையை பெளர்ணமிதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம்.
இந்த மாதத்திற்கான ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு உகந்த நேரமாக 4ஆம் தேதி பகல் 12:02 மணிக்குத் தொடங்கி மறுநாள் 5ஆம் தேதி காலை 10:58 மணி வரை உள்ளது.
இந்த நிலையில் கரோனா நோய்த்தொற்று நாடு முழுவதும் பரவி வருவதால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு திருவண்ணாமலை கிரிவலம் கடந்த மூன்று மாதங்களாக தடை செய்யப்பட்டிருந்தது.

அதேபோல் இந்த மாதமும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி கூறுகையில், “அரசு பல தளர்வுகள் அறிவித்திருந்தாலும், பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கு லட்சக்கணக்கானவர்கள் கூடுவார்கள். இதனால் கரோனா தொற்று அதிகரிக்கககூடும். ஆகவே வெளியூர், உள்ளூர் மக்கள் கிரிவலம் செல்ல வரவேண்டாம்” என்றார்.

இதையும் படிங்க: அமாவாசை பௌர்ணமியான கதை' - வரலாற்று நினைவோடு வழிபாடு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.