திருவண்ணாமலை: பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் அரசு பேருந்து செங்கம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை நோக்கி சென்றது. அப்போது இறையூர் பகுதியில் நிறுத்தி இரண்டு பயணிகளை ஏற்றிச் சென்றதாக அதன் பின்னால் வந்த தனியார் பேருந்து அரசு பேருந்து ஓட்டுநரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், பேருந்தில் இருந்த ஓட்டுநரை தனியார் பேருந்து ஊழியர்கள் கீழே இழுத்து சரமாரியாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சீனிவாசன், ரத்தம் சொட்ட சொட்ட அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
பேருந்தில் பயணம் செய்தவர்கள் தனியார் பேருந்து ஊழியர்களின் அட்டூழியங்களை வீடியோவாக பதிவு செய்து சமூக வளைதளங்களில் பதிவிட்டுள்ளனர். அரசு பேருந்தின் ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் விடியா திமுக அரசில் ஏற்பட்டுள்ளதாகப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க: பழனியில் மொட்டை அடிக்கும் தொழிலாளர்கள் திடீர் போராட்டம் - அவதியில் பக்தர்கள்