திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கண்டவரெட்டியில் பொன்னூர் காவல் நிலைய காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது கள்ளத்தனமாக 100 மதுபாட்டில்கள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து காரில் இருந்த ரஞ்சித்குமார், மணிகண்டன், வினோத், பிரித்திவிராஜ் ஆகிய நான்கு பேரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் இவர்கள் டாஸ்மாக் கடையில் இருந்து மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு அதிக விலையில் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.

இதனையடுத்து இவர்கள் நான்கு பேரையும் காவல் துறையினர் கைது செய்து மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் மது பாட்டில்களை கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் காவல் துறையினர் பறிமுதல் செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: சாதுக்களைக் கொன்று தப்பிச் சென்ற கொலையாளி கைது!