திருவண்ணாமலை நகர மத்தியப் பேருந்து நிலையம் அருகில் உள்ள வணிக வளாகக் கட்டடத்தில் முபாரக் என்பவர் மொத்த விற்பனைக் கடை நடத்தி வந்தார்.
இந்நிலையில் அப்பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை நடப்பதாக நகராட்சி அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் அலுவலர்கள் ஆய்வு செய்தபோது தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், டீ கப்புகள் உள்ளிட்ட 500 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து ரூ.5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி ஆணையர் தலைமையிலான அலுவலர்கள் பறிமுதல் செய்து குடோனுக்குச் சீல் வைத்தனர்.
மேலும் குடோன் உரிமையாளர் முபாரக் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: 'கேரம் ஆட மறுத்த மனைவி: முத்தலாக் கொடுத்த கணவன்...!'