திருவண்ணாமலை : தமிழ்நாட்டில் தற்போது இரண்டாவது அலை கரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில் கரோனா பரவலைக் கட்டுபடுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது.
இந்நிலையில், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திருவண்ணாமலை நகர்ப் பகுதியில் கரோனா தடுப்பு சிறப்பு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, கரோனா விதிமுறைகளைப் பின்பற்றாத பாத்திரக் கடை, நகைக் கடை, உணவகங்கள் போன்ற கடைகளுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தார்.
மேலும், அபராதம் விதித்த கடைகளில் மீண்டும் கரோனா கட்டுபாடுகளை பின்பற்றாவிட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் எச்சரித்தார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 13 ஆயிரத்தை கடந்த கரோனா!