ETV Bharat / state

முன்விரோதம் காரணமாக கொலை: 5 பேர் கைது - one murdered due to family enmity

திருவண்ணாமலை: போளூர் அடுத்த சந்தவாசல் அருகே முன்விரோதம் காரணமாக ஒருவர் கொலை செய்யப்பட்டதை அடுத்து ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

one murdered due to family enmity at tiruvannamalai

author img

By

Published : Feb 5, 2021, 7:49 PM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்து ஆத்துவாம்பாடி கிராமத்தில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்து நடத்தி வரும் ராஜ நிலா (53) குடும்பத்திற்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த காமராஜ், சங்கர் குடும்பத்திற்குமிடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மாதம் இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இந்தத் தகராறில் இரு தரப்பினரின் வீடுகளும் சேதமாகின. இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ராஜநிலா, அவரது மகன் தங்கராசு, சுப்பிரமணி ஆகிய மூன்று பேரும் ஆத்துவாம்பாடி கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக நின்று கொண்டிருந்தபோது கட்டிபூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், அவரது மகன் விஷ்ணு, சீனிவாஸ், ஆத்துவாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த குமார், அவரது மனைவி மங்களம் ஆகியோரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தனர்.

இதையடுத்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்த தங்கராசு சிகிச்சை பலனின்றி கடந்த 31ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

அதனைத்தொடர்ந்து சந்தவாசல் காவல் நிலைய காவல்துறையினர் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து தலைமறைவாக இருந்த ஐந்து பேரை தேடி வந்தனர். இதனைத்தொடர்ந்து ஆறுமுகம், விஷ்ணு, சீனிவாஸ், குமார், மங்களம் ஆகிய ஐந்து பேரையும் நேற்று (பிப்.4) மாலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க... மனைவியை கொலை செய்த கணவர் அதே இடத்தில் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.