திருவண்ணாமலை: ஆரணி அடுத்த குன்னத்தூர் மகளிர் கலைக் கல்லூரியில் பயிலும் 1,500 கல்லூரி மாணவிகள் ஒன்றிணைந்து கல்லூரி வளாகத்தின் முன்பு பல வண்ண மலர்களால் அத்திப்பூ கோலமிட்டு, மாணவிகள் அனைவரும் கேரளா பெண்கள் அணியும் பாரம்பரிய உடைகளை அணிந்து அத்திப்பூ கோலத்தின் முன்பு கேரளா மேளம் மற்றும் பாடல்களை ஒலிபரப்ப செய்து பாடல்களுக்கு ஏற்றவாறு நடனம் ஆடி ஆரணி கல்லூரி மாணவிகள் அனைவரும் ஓணம் பண்டிகை நேற்று ( செப்-08 ) சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர். பின்னர் மாணவிகள் அனைவரும் ஒன்றிணைந்து ஒருவருக்கொருவர் ஓணம் பண்டிகை தின நல்வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதையும் படிங்க:முயல் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிப்பட்டறை - ஆர்வத்துடன் மக்கள் பங்கேற்பு