ETV Bharat / state

‘கிரிவலப் பாதையில் பக்தர்கள் பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது’ - அமைச்சர் எ.வ.வேலு - சாதுக்கள் உள்ளிட்ட எவரும் ஆக்கிரமிக்க கூடாது

கிரிவலப் பாதையில் ஒரு சதவீதம் நெகிழி கூட ஆன்மீக பக்தர்கள் பயன்படுத்தக்கூடாது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு எச்சரித்துள்ளார்.

கிரிவலப் பாதையில் ஒரு சதவீதம் கூட பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது

author img

By

Published : Sep 10, 2022, 3:41 PM IST

திருவண்ணாமலை: நினைத்தாலே முக்தி தரும் தலமாக விளங்கக்கூடிய திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 14 கி.மீ., தொலைவு கொண்ட கிரிவலம். இந்த கிரிவலப் பாதையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும் பௌர்ணமி, கார்த்திகை தீபம் உள்ளிட்ட பல்வேறு திருவிழா காலங்களில் பல லட்சம் பக்தர்களும் கிரிவலம் வந்து அண்ணாமலையாரைத் தரிசித்து வருவது வழக்கம்.

அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்தின் சார்பில் கிரிவலப் பாதையைத் தூய்மையாகப் பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு தலைமையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைச் சபாநாயகர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாத்துரை, செங்கம் மற்றும் கலசபாக்கம் ஆகிய தொகுதிகளை சேர்ந்த எம்எல்ஏக்கள், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொண்டு நிறுவனங்கள், பல்வேறு சமூக அமைப்புகள், நகராட்சி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருவண்ணாமலை கிரிவலப் பாதை முழுக்க 14 கி.மீ., தொலைவிற்கும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த 7 குழுக்களுக்கும் தனித்தனியாக கிரிவலம் பாதை முழுக்க 7 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு அப்பகுதிகளில் ஆன்மீக பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றித் தர வேண்டும் என்றும், கிரிவலப் பாதை முழுக்க எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்கவும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கிரிவலப் பாதையில் உள்ள நடைபாதையையோ நெடுஞ்சாலைத் துறைக்கு சுத்தமான இடத்தையோ சாதுக்கள் உள்ளிட்ட எவரும் ஆக்கிரமிக்கக் கூடாது. மேலும் நடைபாதையில் குடிலோ குடிசைகளோ நிரந்தரமாக அமைத்து அமர்ந்திடவோ உறங்கிடவோ கூடாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் கிரிவலப் பாதையில் ஒரு சதவீதம் நெகிழி கூட ஆன்மீக பக்தர்கள் பயன்படுத்தக்கூடாது என்றும் அவ்வாறு பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

கிரிவலப் பாதையில் ஒரு சதவீதம் கூட பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது

மேலும், சாமியார்களை அப்புறப்படுத்துவது அரசின் நோக்கம் அல்ல என்றும், சாமியார்கள் போர்வையில் சிலர் தவறாக போதைப்பொருள்களை பயன்படுத்தி வருவதாகவும், இது தொடர்பாக காவல் துறையும் அரசாங்கமும் மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்திட வேண்டும். மேலும் கிரிவலப் பாதையில் சாமியார்கள் போதைப் பொருள்களை பயன்படுத்தினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்றும் அவர் எச்சரித்தார்.

இதையும் படிங்க: திருவண்ணாமலையில் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் ஆபத்தான பயணம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.