ETV Bharat / state

எம்ஜிஆர் சிலைக்கு மரியாதை செய்த புதிய மாவட்டச் செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி - அக்ரி எஸ் எஸ் கிருஷ்ணமூர்த்தி

திருவண்ணாமலை: அதிமுகவில் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

New District Secretary SS Krishnamurthy paid homage to the leaders

author img

By

Published : Aug 8, 2020, 7:36 PM IST

இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தலைமையில், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அதிமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, அதிமுக கழக நிர்வாகிகளுடன், கழகக் கொடி ஏந்தி, ஊர்வலமாக வந்து அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திருவண்ணாமலை தண்டராம்பட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு சார்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அதிமுக செய்தித் தொடர்பாளரும், மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு செயலாளர் கோவை சத்யன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிப் பணிகளை விரைவாக முடித்து, புதிய உறுப்பினர்களை அதிகரிக்கச் செய்வது ஆகிய பணிகளை விரைந்து முடித்து கட்சியைப் பலப்படுத்தி தேர்தலில் பெரும்பான்மையாக வெற்றிபெற வைக்க வேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.