திருவண்ணாமலை நகரின் கிரிவலப் பாதையில் உள்ள யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கண்காட்சியாக வைத்து சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
இதனை காண்பதற்கு ஏராளமான குடும்பப் பெண்கள் யோகி ராம்சுரத்குமார் ஆசிரமத்துக்கு வந்து கொலுபொம்மைகளை ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர்.
யோகி ராம்சுரத்குமார் ஆசிரம நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சியில் ஊர்வன, பறப்பன, நடப்பன, மகான்கள், ரிஷிகள், தேவர்கள், தேவதைகள், கடவுள்கள் உள்ளிட்ட அனைத்தும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதில், அம்பாள் ஸ்ரீ லலிதா, சிவன் திருவிளையாடல்கள், கிருஷ்ண லீலைகள், ராமாயண, மகாபாரத காவியங்கள் உள்ளிட்ட இறைவனின் அனைத்து தாத்பரியங்களும் காட்சியமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: நவராத்திரியை முன்னிட்டு களைகட்டும் கொலு பொம்மை விற்பனை!
நவராத்திரி எப்போது கொண்டாடப்படுகிறது?
ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் மகாளய அமாவாசை மறு நாளிலிருந்து ஒன்பது இரவுகள் நவராத்திரி விழாவாக கொண்டாடப்படுகிறது.