நாடு முழுதும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், நாதஸ்வர இசைக் கலைஞர்கள் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், தங்கள் குடும்பத்திற்கு அரசு நிதி உதவி வழங்கக் கோரி, அண்ணாமலையார் கோயில் முன்பு 10க்கும் மேற்பட்ட நாதஸ்வர இசைக் கலைஞர்கள் இணைந்து, கம்பீர நாட்டை இசை ராகத்தை வாசித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நாதஸ்வர கலைமாமணி பிச்சாண்டி, 'மத்திய, மாநில அரசுகளிடம் நாதஸ்வர இசைக் கலைஞர்கள், திருமணங்கள், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்டவற்றிக்கு இசை வாசிக்க முன்தொகை வாங்கி இருந்தோம். தற்போது அனைத்தும் 144 தடை உத்தரவால் ரத்து செய்யப்பட்டதால், எங்களிடம் கொடுக்கப்பட்ட முன்பணத் தொகையை திரும்பப் பெற்றுக் கொண்டனர். இதனால் நாங்கள் திருமண விழாவுக்கு, கோயில் திருவிழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாமல், மிகவும் நலிவடைந்த நிலையில் உள்ளோம். எங்கள் குடும்பத்தில் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்தில்கொண்டு மத்திய, மாநில அரசுகள் எங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில், கிராம நிர்வாக அலுவலர், வட்டாட்சியர் விசாரணை செய்து நாதஸ்வர இசைக் கலைஞர்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும்' என கோரிக்கை வைத்தனர்.
இதையும் படிங்க... மனஉளைச்சலால் திருவண்ணாமலை மீது ஏறிய ரஷ்ய நாட்டு தம்பதி: விரைந்து மீட்ட காவல் துறை