தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அலுவலர்களின் பணியிட மாற்றம், கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதில், திருவண்ணாமலை மாவட்டத்தின் 22ஆவது மாவட்ட ஆட்சியராக பி.முருகேஷ் நேற்று (ஜூன்.16) பொறுப்பேற்றுக் கொண்டார். புதியதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியருக்கு, மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, மாவட்ட திட்ட இயக்குநர் பிரதாப், அனைத்துத் துறை அலுவலர்கள் மலர்கொத்து வழங்கி வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பி.முருகேஷ் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில் ’’ திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன். 16) கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 252 ஆக உள்ளது. எனது முதல் பணி கரோனா தொற்று தடுப்பு பணிகள், மாவட்டத்தில் முழுமையாக கட்டுப்படுத்தி 'Zero Cases' நிலைக்கு கொண்டு வரப்படும்.
மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் அலுவலர்கள் கிராமப்புரங்கள் போன்றப் பகுதிகளில் தடுப்பு ஊசி செலுத்தப்படும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு குழுக்கள் அமைத்து கண்காணிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
மேலும், குடிநீர், சாலை வசதிகள், சுகாதாரம், சுற்றச்சூழல் உள்ளிட்ட பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். ஆன்மீக ஸ்தலமான திருவண்ணாமலை மேம்படுத்தவும், சுற்றுலா பயனிகள் ஈர்க்கும் வகையில் நீண்ட கால திட்டம் தீட்டி செயல்படுத்தப்படும். அரசின் வழிகாட்டுதல்படியும், அமைச்சர்களின் ஆலோசனைப்படியும் மாவட்டத்தின் வளர்ச்சிக்காக சிறப்பாக செயல்படுவேன்'’ என்று தெரிவித்தார் .
இதையும் படிங்க: என் தந்தையை கொலை செய்தது இவர்கள்தான்: மோடி, ஸ்டாலினை டேக் செய்து மீரா ட்வீட்