தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி 144 தடை உத்தரவில் சில தளர்வுகள் இரண்டு தினங்களுக்கு முன்பு அறிவித்தார், அதில் 34 வகையான கடைகள் திறந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியிட்டார்.
இருப்பினும் நேற்று திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த பெரும்பாலான வணிக நிறுவனங்கள் திறக்காமல் ஆட்சியரின் உத்தரவுக்காக காத்திருந்ததை அடுத்து, இன்று திருவண்ணாமலை நகரில் உள்ள காய்கறி, மளிகை கடை மற்றும் மொத்த விற்பனைக் கடை வியாபாரிகள் இன்று காலை தங்களது கடைகளை திறந்தனர்.

காவல்துறையினரும், முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டதால் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு எந்தவிதமான ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் உத்தரவின் பெயரில் நகராட்சி ஊழியர்கள் திருவண்ணாமலை நகரில் திறந்திருந்த காய்கறி, மளிகைக் கடை உள்ளிட்ட வணிக நிறுவனங்களையும் மூடுமாறு அறிவுறுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் காய்கறி மார்க்கெட்டை சுற்றி உள்ளே யாரும் செல்லாதவாறு பேரி கார்டு மூலம் தடுப்பு அமைத்துள்ளனர்.

இதனால் மார்க்கெட் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் அனைத்து வியாபாரிகளும் ஏமாற்றத்துடன் தங்களுடைய கடைகளை மூடி ஆட்சியரின் உத்தரவுக்காக கடைகளின் முன்பாக காத்து வருகின்றனர்.


இதையும் படிங்க: கரோனா தடுப்பு நடவடிக்கைகள்: அமைச்சர் ஆய்வு