ETV Bharat / state

மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை முயற்சி..! - தாய் தற்கொலை முயற்சி

குடும்ப தகராறின் காரணமாக தான் பெற்ற குழந்தைகளை தாயே ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூன்று குழந்தைகளை ஆற்றில் வீசி கொன்று விட்டு தாயும் தற்கொலை முயற்சி..!

author img

By

Published : Aug 5, 2022, 10:05 PM IST

திருவண்ணாமலை: சதாகுப்பம் அருகே தான் பெற்ற மூன்று குழந்தைகளை குடும்பப் பிரச்சனை காரணமாக ஈவு இறக்கமின்றி ஆற்றில் வீசிக் கொன்று விட்டு தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வாணாபுரம் காவல்துறையினர் விரைந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, சதாகுப்பம் கிராமத்தின் அருகே உள்ள தெண்பண்ணை ஆற்றில், தற்கொலைக்கு முயன்ற தாய் அமுதாவையும் நீரில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் சடலங்களையும் கிராம மக்கள் மீட்ட சம்பவம் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை நடத்தியதில், குழந்தைகளை நீரில் மூழ்கடித்துக் கொன்ற தாய் அமுதா, சதாகுப்பம் பகுதியைச் சேர்ந்த கட்டட மேஸ்திரி பரசுராமனின் மனைவி என்பது தெரியவந்தது.

மேலும், கணவன் - மனைவி இசையே தொடர்ந்து குடும்பத் தகராறுகள் நடந்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த தகராறுகளால் அவ்வப்போது அமுதா தனது தாயார் வீட்டிற்குச் சென்று விடுவதும், மீண்டும் சிறிது காலம் கழித்து வீடு திரும்பி குடும்ப வாழ்க்கையில் வாழ்வதுமாய் இருந்துவந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆக.3) கணவன் - மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவிரக்தியடைந்த அமுதா, தன் மூன்று குழந்தைகளான நிலவரசு (5), குரலரசு (4), யாஷினி (3) ஆகிய மூன்று குழந்தைகளையும் இரக்கமின்றி ஆற்றில் வீசிக் கொன்றுவிட்டு தானும் ஆற்றில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தற்கொலைக்கு முயன்ற அமுதாவையும், நீரில் மூழ்கி இறந்த மூன்று குழந்தைகளின் சடலங்களையும் மீட்டது தெரியவந்தது. இதனையடுத்து, இறந்த குழந்தைகளின் சடலங்களை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக வாணாபுரம் காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.

மேலும், தற்கொலைக்கு முயன்ற அமுதாவையும் சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குடும்பத் தகராறிற்காக தான் பெற்ற குழந்தைகளையே ஆற்றில் வீசி தாயே கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: திருவண்ணாமலை சென்னியம்மன் ஆலயத்தில் வழிபட முடியாமல் பக்தர்கள் ஏமாற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.