திருவண்ணாமலை: கீழ்பென்னாத்தூர் அடுத்த வட்ராபுத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் சின்னராசு. ஊராட்சி செயலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சோமசிபாடி கிராமத்தில் செவிலியராக பணியாற்றும் சூர்யா (32) என்ற மனைவியும் லட்சன் (4) மற்றும் உதயன் (1) ஆகிய இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
சின்னராசுக்கும், சூர்யாவுக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு கணவன் - மனைவி இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு 10 மணி அளவில் சின்னராசு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள வெளியே சென்று உள்ளார்.
நள்ளிரவு வீடு திரும்பிய சின்னராசு, வீட்டின் கதவுகள் திறந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டில் இல்லாதது குறித்து அக்கம் பக்கம் உள்ளவர்களிடம் விசாரித்து உள்ளார். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள கிணற்றின் அருகே சூர்யாவின் செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த சின்னராசு இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்து உள்ளார்.
விரைந்து வந்த கீழ்பென்னாத்தூர் காவல் துறையினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் மூன்று மணி நேரத்துக்கு மேலாக போராடி தாய் சூர்யா, குழந்தை உதயன் ஆகியோரின் உடலை கிணற்றில் இருந்து மீட்டனர். மேலும், கிணற்றில் லட்சன் உடலை தேடும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கணவனுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் இரண்டு குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: கொலை செய்து குட்டையில் வீசப்பட்ட விமான நிலைய ஊழியரின் உடல் பாகங்கள் கண்டெடுப்பு