ETV Bharat / state

சோர்ந்து போகாதீங்க.. தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து அசத்திய எம்எல்ஏ! - சோர்ந்து போகாதீங்க

திருவண்ணாமலை: சட்டப்பேரவைத் தேர்தலுக்காக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எம்எல்ஏ பன்னீர்செல்வம், கட்சித் தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்து பரிமாறினார்.

http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/17-March-2021/11039066_thka.mp4
தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து அசத்திய எம்எல்ஏ!
author img

By

Published : Mar 17, 2021, 10:22 AM IST

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிப்பில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை உறுப்பினரும் அதிமுக வேட்பாளருமான பன்னீர்செல்வம், திருவண்ணாமலையிலுள்ள கலசப்பாக்கம் தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் மதியம் 3 மணிக்கு மேல் வாக்கு சேகரிக்கத் தயாரான அவர், தன்னுடன் வாக்கு சேகரிக்கும் தொண்டர்கள் வெயிலில் சோர்ந்து இருப்பதைக் கண்டு வருத்தம் அடைந்தார். தொடர்ந்து அவர்களுக்கு தெம்பூட்டும் வகையில், எறையூர் கிராமத்தில் இருந்த தேநீர் கடைக்குள் சென்று தொண்டர்களுக்கு தன் கையால் தேநீர் தயாரித்துக் கொடுத்தார்.

தொண்டர்களுக்கு தேநீர் தயாரித்துக் கொடுத்து அசத்திய எம்எல்ஏ!

புத்துணர்வு பெற்ற தொண்டர்கள் உற்சாகமாக புறப்பட, மீண்டும் கலசப்பாக்கம் தொகுதியில் வெற்றி வாய்ப்பை சூடும் உத்வேகத்துடன் பன்னீர்செல்வம் புறப்பட்டுச் சென்றார்.

இதையும் படிங்க:மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்த அமைச்சர் விஜயபாஸ்கர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.