திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்கு தமிழ்நாடு மட்டுமல்லாமல் அண்டை மாநிலங்களில் இருந்தும் தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகைதருகின்றனர். அப்படிவரும் பக்தர்களுக்கு போதிய தங்கும் விடுதி வசதி இல்லை என்றும், அரசு சார்பில் உரிய தங்கும் விடுதிகள் அமைத்து கொடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தனர்.
இதையடுத்து கிரிவலப்பாதையில் ஈசானிய லிங்கம் அருகில் கோயில் நிர்வாகம், பொதுப்பணித் துறை சார்பில் ரூ.28 கோடி மதிப்பீட்டில்123 அறைகளுடன் 430 நபர்கள் தங்கும் வகையில் புதிதாக யாத்ரி நிவாஸ் என்ற பெயரில் தங்கும் விடுதி கட்ட 2018ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால், அறநிலையத் துறை அமைச்சரின் செயலர் ராமசந்திரன் கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.