ETV Bharat / state

ஆட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

திருவண்ணாமாலை: தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு ஒருவர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

immolate
author img

By

Published : Jun 3, 2019, 11:09 PM IST

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில், இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதனிடையே, ஆடையூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர் தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாகக் கூறி, மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு குடும்பத்துடன் திடீரென வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ஏற்கனவே தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மூன்று முறை மனு அளித்ததாகவும், அந்த மனுக்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மனம் உடைந்த சுப்பிரமணி தீக்குளிக்க குடும்பத்துடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி செய்த சுப்பிரமணி குடும்பத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பு சிறப்பான முறையில் செயல்பட்டு தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர். இதனால், மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Intro:திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.

Body:திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்களிடமிருந்தும் , மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் மாற்று திறனாளிகளிடம் இருந்தும் 605 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் நேரில் பெற்றுக் கொண்டார்.

இதனிடையே ஆடையூரை சேர்ந்த விவசாயி சுப்பிரமணி என்பவர் தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு குடும்பத்துடன் திடீரென வந்து தீக்குளிக்க முயற்சி செய்தார்.

ஏற்கனவே தனது நிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மூன்று முறை மனு அளித்ததாகவும், அந்த மனுக்களுக்கு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் மனம் உடைந்த சுப்பிரமணி தீக்குளிக்க குடும்பத்துடன் வந்ததாகவும் கூறப்படுகிறது.

தீக்குளிக்க முயற்சி செய்த சுப்பிரமணி குடும்பத்தினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி அசம்பாவித சம்பவம் ஏதும் நடக்கும் முன்பு சிறப்பான முறையில் செயல்பட்டு தீக்குளிப்பதை தடுத்து நிறுத்தினர்.

இதனால் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன்பு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Conclusion:திருவண்ணாமலை மாவட்டம் ஆடையூரை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது நிலத்தை வேறு ஒருவர் ஆக்கிரமிப்பு செய்வதாக கூறி மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் முன் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.