திருவண்ணாமலை: சேத்துப்பட்டு வட்டம் அழகிரி தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன்(46). இவர், தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 7 வருடங்களாக விவசாயிகளிடம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்துவந்தார். ஆனால், நெல்மூட்டைகளுக்கான பணத்தை சரிவர கொடுக்கமால் ஏமாற்றி வந்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், விற்பனை நிலையத்தில் உள்ள அலுவலர்களிடம் முறையிட்டுள்ளனர். இதுதொடர்பாக வேளாண் விற்பனைக்குழு செயலாளர் ரா. தர்மராஜ் அளித்த புகாரின் அடிப்படையில், திருவண்ணாமலை மாவட்ட குற்றப்பிரிவு காவலர்கள் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த மே மாதம் 5ஆம் தேதி முதல் ஜூன் 25 வரை 159 விவசாயிகளிடம் 5081 நெல்மூட்டைகளை தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் மூலம் அவர் பெற்றுள்ளதும், அதற்கு உரிய தொகை ரூ. 53,71,142-ஐ விவசாயிகளுக்கு தராமல் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையும் படிங்க: காஞ்சியில் கஞ்சா வியாபாரி படுகொலை - 5 பேர் கைது