திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ராவந்தவாடி வனப்பகுதியில் வன விலங்குகளை வேட்டையாடுவதாக, செங்கம் வனச்சரகர் ராமநாதனுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வனத்துறையினர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக சுற்றி திரிந்தவரை வனத்துறையினர் மடக்கி பிடிக்க முயன்றபோது, அவர் வேட்டையாட வைத்திருந்த பொருள்களை எறிந்துவிட்டு, தப்பிக்க முயற்சித்தார்.
இதனையடுத்து காவல் துறையினர் அவரை மடக்கி பிடித்து அவரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: சோதனைச் சாவடியில் சிக்கிய 336 மது பாட்டில்கள்!