ETV Bharat / state

திருவண்ணாமலை கோயில் கோபுரம் அருகே வணிக வளாகம் கட்டும் பணியை உடனடியாக நிறுத்த உயர்நீதிமன்றம் ஆணை! - hrce

Tiruvannamalai Temple: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்டும் இந்து சமய அறநிலையத் துறை நடவடிக்கைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 10, 2023, 7:43 PM IST

சென்னை: திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலில் கிழக்குப் பகுதியில் உள்ள ராஜகோபுரத்திற்கு எதிரில் 6 கோடியே 40 லட்சம் மதிப்பில், இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அடுக்குமாடி வணிக வளாகம் கட்ட திட்டமிடப்பட்டு, பொதுப் பணித் துறையால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பிரசித்தி பெற்ற அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான வணிக கட்டடத்தை வாடகைதாரர்கள் ஆக்கிரமித்து இருந்ததால், அவர்களிடம் இருந்து, மீட்கப்பட்ட இடத்தில் கூடுதலான மாடிகளுடன் வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதால், கோபுரம் மறைக்கப்படும் எனப் பக்தர்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது.

எனவே, இந்த கட்டடப் பணிகளால், அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் சேதம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், அதனால், கட்டடப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று என்று கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர முறையீடு செய்யப்பட்டது.

கோயில்கள் மற்றும் புராதன சின்னங்கள் பாதுகாப்பு தொடர்பான வழக்குகளை விசாரித்து வரும் உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வில் நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி P.D.ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் T.ரமேஷ், வழக்கறிஞர் ஜெகன்நாத், ரங்கராஜன் நரசிம்மன் ஆகியோர் இந்த விவகாரம் தொடர்பாக அவசர முறையீடு செய்தனர்.

அப்போது அறநிலையத் துறை தரப்பில் அப்போது அறநிலையத் துறை தரப்பில் ராஜ கோபுரம் எதிரில் ஏறத்தாழ 6 கோடி ரூபாய் செலவில் வட கிழக்கு மற்றும் தென் கிழக்குப் பகுதிகளில் 150 கடைகளைக் கொண்ட இரண்டு அடுக்குமாடி கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகவும், இதனால் கோயிலின் ராஜ கோபுரத்தைத் தரிசிப்பதோ, ராஜகோபுரத்தின் கட்டுமானமோ பாதிக்கப்படாது எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், கோபுரத்தை மறைக்கும் வகையில் அறநிலையத்துறை மேற்கொள்ளும் கட்டுமான பணிகளுக்கு உடனடியாக தடை விதிப்பதாக உத்தரவு பிறப்பித்தனர். இந்த தடை உத்தரவு பிறப்பித்த நிமிடத்திலிருந்து, எந்தவித கட்டுமான பணிகளிலும் மேற்கொள்ளக்கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.

இதையும் படிங்க: "ஒரு காசு கூட கைப்பற்றவில்லை" - அமைச்சர் எ.வ.வேலு கண்ணீர் மல்க பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.