ETV Bharat / state

’200 கிலோ ஐஸ்கட்டி... 10 நிமிடம் சமகோண ஆசனம்' - நான்கரை வயது சிறுமியின் அசத்தல் முயற்சி - 4.5 வயது சிறுமி சாதனை முயற்சி

திருவண்ணாமலை: கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நான்கரை வயது சிறுமி 200 கிலோ ஐஸ்கட்டி மீது சமகோண ஆசனம் செய்து அசத்தியிருக்கிறார்.

tiruvannamalai
tiruvannamalai
author img

By

Published : Aug 5, 2020, 2:56 PM IST

திருவண்ணாமலை மாவட்டம், கிரிவலப்பாதையில் உள்ள மின்நகர் பகுதியில் கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ரமேஷ் என்பவர் யோகா மையம் நடத்தி வருகிறார். இவரிடம் லத்திகா ஸ்ரீ (4.5) என்ற சிறுமி யோகா பயின்று வருகிறார். திருவண்ணாமலை இடுக்குப் பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த சிவக்குமார், சந்திரா தம்பதியரின் மகளான லத்திகா ஸ்ரீ, யூகேஜி படித்து வரும் நிலையில், கரோனா விழிப்புணர்வு ஏற்படுத்த விரும்பியுள்ளார்.

இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு சாதனை புத்தகத்தில் இடம் பெறுவதற்காக 200 கிலோ ஐஸ் கட்டி மீது சமகோண ஆசனம் செய்ய நினைத்த மாணவி லத்திகா ஸ்ரீ, அதை கரோனா விழிப்புணர்வாகவும் மாற்றினார். இந்த ஆசனத்தை 10 நிமிடங்கள் செய்து காட்டினார். ஐஸ் கட்டி மீது பத்து நிமிடங்கள் சமகோண ஆசனத்தில் ஈடுபடும் லத்திகா ஸ்ரீ, சாதாரண பரப்பில் ஒரு மணிநேரம் செய்வதாக துள்ளலாகக் கூறுகிறார்.

நான்கரை வயது சிறுமியின் அசத்தல் முயற்சி!

இந்த யோகாசனம் செய்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதால் இந்த ஆசனம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டதாகவும் மாணவி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கரோனா நோய் அச்சத்தால் மக்கள் அனைவரும் முடங்கிக் கிடக்கும் இந்த வேளையில், இந்த யோகாசனம் செய்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பதை மாணவி லத்திகா நினைவுப்படுத்தியுள்ளார். இந்த ஆசனத்தை செய்ய ஒரு ஆண்டு முழுவதும் இவர் பயிற்சி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: யோகா கலையில் சாதனை புரிந்து அசத்திய எல்.கே.ஜி சிறுமி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.