திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த காஞ்சி கிராமத்தைச் சேர்ந்த அசோக் என்பவரது மகள் பிரியங்கா, ரஞ்சித் என்பவரது மகள் ரமாதேவி. இந்த இரண்டு சிறுமிகளும் காஞ்சி அரசு ஆரம்பப் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் குடிமராமத்துப் பணிக்காகத் தோண்டப்பட்டிருந்த மழைநீர் நிரம்பிய 10 அடி ஆழம் கொண்ட அந்தக் குட்டையில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்தவுடன் விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் மீட்புப்பணித் துறையினர் இரு சிறுமிகளின் உடல்களையும் மீட்டனர். இரு சிறுமிகள் குட்டையில் விழுந்து உயிரிழந்த இச்சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: யோகி பாபுவை இயக்க காத்திருக்கும் பிரபல நடிகர்!