திருவண்ணாமலை மாவட்டம் கீழ்சிறுபாக்கம் கிராமத்தை சேர்ந்த விவசாயி அண்ணாமலையின் மனைவி அம்பிகா. இவர் விவசாய நிலத்தில் வேலை முடித்துக்கொண்டு வீட்டுக்குத் திரும்பும் போது இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. அதனால், அங்கிருந்த தென்னை மரத்தினருகே ஒதுங்கி நின்றார். ஆனால், எதிர்ப்பாரதவிதமாக அவர் மீது இடி விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தண்டராம்பட்டு காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: ஊரடங்கு உத்தரவு - மனைவியைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் கணவன் தற்கொலை!