ETV Bharat / state

மசூதிக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்த இருவர் கைது - Thiruvannamalai latest news

கீழ்பெண்ணாத்தூர் பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்தது மட்டுமல்லாமல், கொலை மிரட்டல் விடுத்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பள்ளிவாசல் இடத்தை ஆக்கிரமிப்பு செய்த இருவர் கைது!

author img

By

Published : Feb 6, 2023, 11:34 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் மஸ்ஜிதே தைய்யிப் சுன்னத் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமாக 1.5 ஏக்கர் அளவிலான நிலம் உள்ளது. இந்த இடத்தில் தனி நபர்கள் ராஜா மற்றும் சுந்தர் ஆகியோருக்கும் ஒரு அடி இடம் உள்ளதாக கூறி, அந்த இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கீழ்பெண்ணாத்தூர் தாசில்தார் முன்னிலையில், சர்வேயர் இடத்தினை அளவீடு செய்து எல்லைகள் நடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைவர் நாசர் உசேன்

ராஜா மற்றும் சுந்தர், அந்த எல்லைக்கல்லை எடுத்துவிட்டு இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்றுள்ளனர். இதுதொடர்பாக அவர்களிடம் கேட்டதற்கு, பள்ளிவாசலைச் சேர்ந்தவர்களை இருவரும் தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளிவாசல் சார்பாக கீழ்பெண்ணாத்தூர் காவல் துறையினருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், ராஜா மற்றும் சுந்தர் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Pocso Arrest:13 வயது மகளுக்கு பாலியல் சீண்டல்.. 3 கி.மீ பைக்கில் விடாமல் துரத்திய துணிவுமிக்க தந்தை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.