திருவண்ணாமலை: திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபம், நேற்று (டிச.6) மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. வந்தவாசி அடுத்த வெண்குன்றம் ஊராட்சியில் 1,400 அடி உயரம் கொண்ட மலை உச்சியில் தவழகிரீஸ்வரர் கோயில் உள்ளது.
கோயில் உச்சியில் உள்ள இரண்டு இடங்களில் கொப்பரையில் நெய் நிரப்பப்பட்டு மகா தீபம் ஏற்றப்பட்டது. இதனை காண்பதற்காக வந்த ஏராளமான பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என்று பக்தி முழக்கமிட்டு சாமி தரிசனம் செய்தனர்.
வந்தவாசி டிஎஸ்பி கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: கார்த்திகை தீபம்: லட்ச தீபத்தில் ஜொலித்த மீனாட்சி அம்மன் கோயில்!