திருவண்ணாமலை: திருவண்ணாமலை நகரை ஒட்டி அமைந்துள்ள தேவனாம்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள சுயம்பு சுப்பிரமணியசாமி திருக்கோயிலில் ஜப்பான் நாட்டைச்சேர்ந்த டக்கா யூகி ஓஷி தலைமையில் சிறப்பு யாகம் நடைபெற்றது. இதில் பல்வேறு வகையான சிறப்பு மூலிகைகள், வாசனைத்திரவியங்கள் யாக குண்டத்தில் போடப்பட்டன.
இந்த யாகத்தில் ஜப்பான் நாட்டைச்சேர்ந்த சாக்கோ ஓஷி, சாயாஓஷி, மாஸ்கோஓஷி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதனைத்தொடர்ந்து சுப்பிரமணியசுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெற்றது. இந்த யாகத்திற்கான சிறப்பு ஏற்பாடுகளை மரக்காணத்தைப் பூர்வீகமாக கொண்ட ஜப்பானில் வாழும் சுப்பிரமணியம் செய்திருந்தார்.
டக்கா யூகி ஓஷி சமஸ்கிருதத்தில் மந்திரம் ஓதியதை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்தனர். இந்த யாகத்தில் தேவனாம்பட்டு கிராமத்தைச்சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காக வேண்டி சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு விருந்தினராக திருவண்ணாமலை மாவட்ட கராத்தே சங்கத்தின் கௌரவ தலைவர் கௌதம் பாண்டு, கோவில் குருக்கள் சந்தோஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். இதனைத்தொடர்ந்து கிராம மக்களுக்கு புளி சாதம், தயிர் சாதம் அன்னதானமாக வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: ஆடி அமாவாசை: மதுரை மல்லிகை கிலோ ரூ.900க்கு விற்பனை!