நாட்டில் பாரம்பரிய நீர் நிலைகள் புதுப்பித்தல், பயனற்ற ஆழ்துளைக் கிணறுகளில் மழைநீர் சேகரித்தல், மரம் வளர்க்க ஊக்குவித்தல் உள்ளிட்ட 5 குறிக்கோள்களைக் கொண்டு ஜல்சக்தி அபியான் நீர் மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.
இந்த திட்டம் குறித்த விழிப்புணர்வு பரப்புரையை கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி தலைமையில் மழை நீர் சேமிப்பின் அவசியம், மழைநீர் கட்டமைப்புக்களை உருவாக்கும் வழிமுறை குறித்த துண்டு பிரசுரங்கள் வீடு வீடாக வழங்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக இத்திட்டம் குறித்து தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுடன் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் திருவண்ணாமலையில் எங்கெங்கு இத்திட்டம் செயல்பட உள்ளது என்பது பற்றியும் வருகிற பருவமழையின் நீரை எப்படி சேமிப்பது பற்றியும் தற்போது மேற்கொள்ளப்படும் திட்டத் தொடக்கம் ஆகியவையின் அடிப்படையில் ஆலோசிக்கப்பட்டது.