ETV Bharat / state

'நிலத்தடி நீர் சேமிப்பு - தி.மலையை முதல் மாவட்டமாக கொண்டு வர முயற்சி' - ஆட்சியர் - tiruvannamalai

திருவண்ணாமலை: இந்திய அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளதாகவும், நிலத்தடி நீர் சேகரிப்பில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலையை கொண்டு வரும் முனைப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது என்றும் ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி தெரிவித்திருக்கிறார்.

jal-shakti-abhiyan
author img

By

Published : Sep 4, 2019, 1:21 PM IST

திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையம் சார்பில் நடைபெற்ற உழவர் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தீயணைப்புத்துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில், வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, குறைந்த நீரில் அதிக விளைச்சல் பெறும் மாற்றுப்பயிர் சாகுபடி, பல்வேறு பயிர்களின் நீர்த்தேவை, நெல் சாகுபடியில் நீர் குழாய் தொழில்நுட்பம் ஆகியவை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உழவர் விழாவை மாவட்ட ஆட்சியர் கே.எஸ். கந்தசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து விழாவில் பேசிய அவர், தமிழ்நாட்டிலேயே நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளதாகவும், மணிலா சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தைப் பிடிக்கும் எனவும் தெரிவித்தார். இந்திய அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளதாகவும், நிலத்தடி நீர் சேகரிப்பில் முதல் மாவட்டமாக திருவண்ணாமலையை கொண்டு வரும் முனைப்புடன் மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது எனவும் கூறினார்.

ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் நடைபெற்ற உழவர் விழா மற்றும் கண்காட்சி

விவசாயத்திற்கு தேவையான நீரின் அளவை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என்றும் மண் வளம் காக்கவும், குறைந்த நீரில் அதிக உற்பத்தி, ஆகியவற்றுக்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும் எனவும் ஆட்சியர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து சிறுதானிய பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறுதானிய மகத்துவ மைய தலைவர் பி. பரசுராமன், நீர்வடிப்பகுதி மேலாண்மை என்ற தலைப்பில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் வி. ஸ்ரீராம், வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி இணைப் பேராசிரியர் எஸ். அன்புமணி, வேளாண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் பி. நாராயணன் ஆகியோர் உரை நிகழ்த்தினர். இவ்விழாவில் துறை சார்ந்த அலுவலர்கள், நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Intro:திருவண்ணாமலையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் உழவர் விழா மற்றும் கண்காட்சி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.Body:திருவண்ணாமலையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் உழவர் விழா மற்றும் கண்காட்சி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை செப்.04- திருவண்ணாமலை மாவட்ட வேளாண் அறிவியல் மையம் சார்பில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் உழவர் விழா மற்றும் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற உழவர் கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் கே. எஸ். கந்தசாமி திறந்து வைத்து பார்வையிட்டார். கண்காட்சியில் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வேளாண் அறிவியல் மையம் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. வேளாண்மைத்துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில்

வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள், வீடுகளில் மழைநீர் சேகரிப்பு, குறைந்த நீரில் அதிக வருமானம் பெறும் மாற்றுப்பயிர் சாகுபடி, பல்வேறு பயிர்களில் நீர்த்தேவை, நெல் சாகுபடியில் நீர் குழாய் தொழில்நுட்பம் ஆகியவைை குறித்து விவசாயிகளுக்கு விளக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற உழவர் விழாவினை மாவட்ட ஆட்சியர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் வி. சுரேஷ் அனைவரையும் வரவேற்றார். முதுநிலைை விஞ்ஞானி மற்றும் தலைவர் என். ரமேஷ் முன்னிலை வகித்தார். இவ்விழாவில் தலைமையேற்று பேசிய மாவட்ட ஆட்சியர், தமிழகத்தில் நெல் உற்பத்தியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதனைத்தொடர்ந்து மணிலா சாகுபடியில் திருவண்ணாமலை மாவட்டம் முதலிடத்தைை பிடிக்கும் எனவும், இந்திய அளவில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டமும் உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 860 கிராம பஞ்சாயத்துக்களில் 731 கிராமங்கள் நிலத்தடி நீர் குறைந்து பாதிக்கப்பட்டுள்ளது. நிலத்தடி நீர் சேமிப்பில் முதல் மாவட்டமாக நமது மாவட்டம் வரவேண்டும் என மாவட்ட நிர்வாகம் செயல்படுகிறது. விவசாயத்திற்கான தேவையான நீரின் அளவை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மண் வளம் காக்கவும், அதிக உற்பத்தி, குறைந்த நீர் வளம் ஆகியவற்றுக்கு விவசாயிகள் ஒருங்கிணைந்து ஒரே மாதிரியான பயிர்களை சாகுபடி செய்ய வேண்டும். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப, தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப விவசாயிகள் தங்களைை மாற்றிக்கொள்ள வேண்டும் எனக் கூறினார். அவரைத் தொடர்ந்து சிறுதானிய பயிர் சாகுபடியில் நவீன தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் சிறுதானிய மகத்துவ மைய தலைவர் பி. பரசுராமன், நீர்வடிப்பகுதி மேலாண்மை என்ற தலைப்பில் நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் வி. ஸ்ரீராம், வேளாண்மையில் நீர் மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் கல்லூரி இணைப்பேராசிரியர் எஸ். அன்புமணி, வேளாண்மையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் பி. நாராயணன் ஆகியோர் தொழில்நுட்ப உரை நிகழ்த்தினர். இவ்விழாவில் வேளாண் துறை இணை இயக்குனர் கே. ராஜசேகர், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் கே. கலைவாணி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கே. மெய்யழகன், வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரி முதல்வர் எம். பாண்டியன், தோட்டக்கலை துணை இயக்குனர் எம். கண்ணன், பட்டு வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் சி. ராமலிங்கம், வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் டி. மார்க்ரெட் மற்றும் ஏராளமான விவசாயிகள் இவ்விழாவில் கலந்து கொண்டனர்.Conclusion:திருவண்ணாமலையில் ஜல் சக்தி அபியான் திட்டத்தின் கீழ் உழவர் விழா மற்றும் கண்காட்சி- மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.