திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று (ஜூன் 15) வரை கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 702ஆக இருந்தது. இன்று (ஜூன் 16) புதிதாக 65 பேருக்கு நோய்த் தொற்று உறுதியானது. இதனால், மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.
நேற்று (ஜூன் 15) வரை கரோனா நோய்த் தொற்றால் சிகிச்சைப் பெற்று குணமடைந்தோரின் எண்ணிக்கை 437ஆக உள்ளது. சென்னையிலிருந்து வந்த 18 பேர், கர்நாடகா மாநிலம், திருப்பூர், காஞ்சிபுரத்தில் இருந்து வந்த தலா இருவர், மும்பையிலிருந்து வந்த ஒருவர், நோயாளியுடன் தொடர்பில் இருந்த 30 பேர், புறநோயாளிகள் பிரிவில் இருந்த 7 பேர் உள்ளிட்ட 65 பேருக்கு இன்று மட்டும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
நோயாளியுடன் தொடர்பில் இருந்த 30 பேர், மருத்துவமனையில் வெளிநோயாளிகள் பிரிவில் தாங்களாகவே வந்து பரிசோதனை மேற்கொண்டனர்.
திருவண்ணாமலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்வு
திருவண்ணாமலை: இன்று ( ஜூன் 16) ஒரே நாளில் 65 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், திருவண்ணாமலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 767ஆக உயர்ந்துள்ளது.