ETV Bharat / state

அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் தொடரும் ஐடி ரெய்டு! - AV velu it raid

Minister ev velu it raid update: அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய கம்பி வியாபாரியின் வீடு, கடை, குடோன், மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 4 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

வருமான வரித்துறை அதிரடி சோதனை
வருமான வரித்துறை அதிரடி சோதனை
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 5, 2023, 5:18 PM IST

திருவண்ணாமலை: தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் 3 நாட்களாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். முதல் நாளன்று திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூரில் உள்ள அருணை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை, அருணை பொறியியல் கல்லூரி, அருணை பார்மஸி கல்லூரி, ஜீவா வேலு பன்னாட்டு பள்ளி, அருணை செவிலியர் கல்லூரி மற்றும் மெட்ரிக் பள்ளி, குமரன் பாலிடெக்னிக் ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் அமைச்சருக்குச் சொந்தமான 30 கார்களிலிலும் 3 பேருந்துகளிலும் உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நவ 3ஆம் தேதி அதிகாலை 7 மணிக்கு மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் சோதனை துவங்கியது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக அமைச்சர் எ.வ.வேலுக்குச் சொந்தமான அருணை கட்டுமான நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்று திருவண்ணாமலை கீழ் நாச்சிபட்டு பகுதியில் உள்ள கஜலட்சுமி நகரில் உள்ள அமைச்சர் எ.வ.வேலுவின் இரண்டாவது மகன் எ.வ.வே.கம்பனின் வீட்டில் இரண்டு கார்களில் 5க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் காலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அமைச்சரின் எ.வ.வேலுவின் தொடர்புடையவர்களின் சோதனை விரிவுபடுத்தப்பட்டது. தானிப்பாடி பகுதியைச் சேர்ந்த அலிபாயில் மகான் ஜமால் பாய் என்பவர் அப்பகுதியில் கம்பி கடை, சிமெண்ட் கடை, பெட்ரோல் பங்க் எனப் பல வியாபாரங்கள் செய்து வருகிறார்.

தற்போது அவருடைய வீடு, கடை, குடோன், மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட நான்கு இடங்களில் மத்திய துணை தொழிற் பாதுகாப்புப் படையினரின் பாதுகாப்புடன் வருமான வரித்துறை அதிகாரிகள் 20க்கும் மேற்பட்டோர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சருக்குத் தொடர்புடைய இடங்களில் சோதனையை விரிவுபடுத்த உள்ளனர். தொடர் வருமான வரித்துறை சோதனை திமுக பிரமுகர்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் தொடர்புடைய இடங்களில் 3வது நாளாக வருமானவரி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.