திருவண்ணாமலை அடுத்த பண்டிதபட்டு கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கரன் மகன் இன்பராஜ் (11). இவர் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று (ஜன. 17) மாலை அதே பகுதியை சேர்ந்த இரண்டு நண்பர்களுடன் அருகிலுள்ள விவசாய கிணற்றில் குளிக்க சென்றுள்ளனர். கிணற்றில் குளிக்கும்போது எதிர்பாராத விதமாக இன்பராஜ் தண்ணீரில் மூழ்கியுள்ளார். சிறிது நேரமாகியும் மீண்டு வெளியே வராததால் அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர்கள் அருகில் இருந்த பொதுமக்களிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
பின்னர் அனைவரும் ஓடி வந்து பார்த்தபோது கிணறு முழுவதும் தண்ணீர் இருந்ததால் சிறுவன் உயிரிழந்திருக்கலாம் என எண்ணி உடனடியாக திருவண்ணாமலை தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர், கிணற்றிலிருந்து நீரை வெளியேற்றுவதற்காக 5 மின் மோட்டார்களை பொருத்தி தண்ணீரை வெளியேற்றி வந்தனர்.
அப்போது, கிணற்றில் உள்ள திட்டில் சிறுவன் இறந்து கிடப்பது தெரியவந்தது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் சிறுவனின் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க...டிஆர்பி வழக்கு: பார்க் மாஜி சிஇஓ மருத்துவமனையில் அனுமதி!