ETV Bharat / state

கலவரம் மூண்ட வீரளூர் கிராமத்தில் மனித உரிமைகள் ஐஜி ஆய்வு!

இறந்தவா்களின் சடலத்தை எடுத்து செல்லும் போது இரு சமூகத்தினா் இடையே கலவரம் ஏற்பட்ட வீரளூர் கிராமத்தில் காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஐி பிராபாகரன் ஆய்வு செய்தார்.

சடலம் எடுத்து செல்வதில் கலவரம் நடைபெற்ற வீரளூர் கிராமத்தில் ஐஜி ஆய்வு

author img

By

Published : Feb 10, 2023, 7:23 AM IST

சடலம் எடுத்து செல்வதில் கலவரம் நடைபெற்ற வீரளூர் கிராமத்தில் ஐஜி ஆய்வு

திருவண்ணாமலை: கலசப்பாக்கம் தாலுகாவுக்கு உட்பட்ட வீரளூர் கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் வசிக்கும் 60 குடும்பத்தைச் சேர்ந்த மக்கள் இறப்பு ஏற்பட்டால் வடகரை நம்மியந்தல் மாதா கோயில் வழியாக உடலை எடுத்துச் சென்று வருகின்றனர். ஆனால் இந்த பாதை சரியில்லாத காரணத்தால், பொது நெடுஞ்சாலை வழியாக இறந்த சடலத்தை எடுத்து செல்ல வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைத்தனர்.

இருப்பினும் அதே கிராமத்தைச் சேர்ந்த மற்றொரு தரப்பினர் கிராம சாலையில் இறந்தவர்களின் சடலத்தை எடுத்துச் செல்லும் போது பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும் என்றும் தற்போது செல்லும் பாதையிலேயே சடலத்தை கொண்டு செல்லலாம் என்றும் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கடந்த வருடம் அப்போதைய தாசில்தார் ஜெகதீசன் தலைமையில் சமரச கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு பின்னர் அப்போதைய ஆரணி ஆர்.டி.ஓ. கவிதா, கிராம பொது நெடுஞ்சாலை வழியாக செல்ல உத்தரவு வழங்கினார். இதனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம் தேதி கிராம பொது நெடுஞ்சாலை வழியாக சடலம் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது அருந்ததியின மக்களுக்கும், கிராம மக்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. இதில் வீடுகள், இருசக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு சுமாா் 130க்கும் மேற்பட்ட நபா்கள் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இது தொடர்பாக கடலாடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இருப்பினும் அருந்ததியின மக்கள், காவல் துறையினரின் விசாரணை சரியில்லை என முன்னாள் தலைவர் முத்துராமன் தலைமையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தை நாடினர். அதன் பின்னர் டெல்லியில் இருந்து ஆணையம் வந்து விரிவான விசாரணை நடத்தி சென்ற பின்பு கிராம ஆண்கள் 60 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டனர்.

மேலும் பாதிக்கப்பட்ட 126 அருந்ததியின நபர்களில் 75 நபர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் வழங்கப்படும் இலவச வீடுகள் மற்றும் கலவரத்தில் பாதிக்கப்பட்ட 84 நபர்களுக்கு முதல் தவணை மற்றும் இரண்டாவது தவனையாக மொத்தம் 61 லட்சத்து 81 ஆயிரத்து 986 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடா்பாக பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் துணை தலைவா் ஸ்ரீ அருன்ஹால்டா் முன்பாக இந்த வழக்கின் விசாரணை குறித்து காவல்துறை சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஐி பிராபாகரன் அறிக்கை அளிக்க வருகின்ற 17ஆம் தேதி டெல்லிக்கு செல்ல உள்ளார்.

இந்த நிலையில் இரு சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்ட இடத்தில் ஐஜி பிரபாகரன் நோில் சென்று ஆய்வு மேற்கொண்டாா். சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் ஐஜி வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் போலீசார் தொடர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனா்.

இதையும் படிங்க: அரசு பேருந்தில் நகைகொள்ளையடிக்க முயற்சி - 2 பெண்கள் பிடிப்பட்டனர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.