செங்கம் அடுத்த அமர்நாதபுதூர் பகுதியில் சிறப்பு மனுநீதி நாள் திட்ட விழா நடைபெற்றது. இதில் 66 இருளர் இன பயனாளிகளுக்கு சாதி சான்றிதழ் வழங்கப்பட்டது.
மேலும் இவ்விழாவில் திருவண்ணாமலை மாவட்ட கோட்டாட்சியர் ஸ்ரீதேவி, வட்டாட்சியர் பார்த்தசாரதி, செங்கம் சமூக பாதுகாப்பு வட்டாட்சியர் சுகுணா, வட்ட வழங்க அலுவலர் சுமதி, வேளாண் துறை அலுவலர்கள், கால்நடை மருத்துவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த விழாவில், கொரோனா வைரஸ் பற்றியும், கொரோனா காய்ச்சலிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பது குறித்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.