ETV Bharat / state

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய இந்து முன்னணியினர்: சிலைகள் பறிப்பு! - விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய இந்து அமைப்பினர்

திருவண்ணாமலை: கரோனா விதிகளை மீறி விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய இந்து முன்னணியினரின் விநாயகர் சிலையை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய இந்து முன்னணியினர்: சிலைகள் பறிப்பு!
Vinayagar chathurthi celebration
author img

By

Published : Aug 23, 2020, 2:07 AM IST

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த தேவிகாபுரம் கிராமத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த பிரமுகர் சுரேஷ் உள்ளிட்ட இந்து முன்னணியினர் விநாயக சிலை வைத்து வழிபடுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் திருவண்ணாமலை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் சேத்துப்பட்டு காவல் நிலைய காவல் துறையினர் தேவிகாபுரத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து இந்து முன்னணியைச் சேர்ந்தவர்கள் 3அடி விநாயகர் சிலையை, தேவிகாபுரத்தில் உள்ள ராமலிங்கசுவாமி தெருவில் வைத்து வழிபட்டு, இரண்டு மூன்று நபர்கள் மட்டுமே ஊர்வலமாக சென்று தேவிகாபுரம் பஜார் வீதியிலுள்ள திருகாமேஷ்வரர் ஆலயத்தில் சிலையை வைக்க முயன்றனர்.

அப்போது, காவல் துறை, வருவாய்த் துறை அலுவலர்கள் இந்து முன்னணியைச் சேர்ந்தவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும், திருகாமேஷ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்ட 3அடி விநாயகர் சிலையை பறிமுதல் செய்த காவல் துறையினர் தேவிகாபுரம் வி.ஏ.ஓ அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.