இந்து மக்கள் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட தலைவர் அசோக்குமார் அளித்த அந்த மனுவில், “தமிழ்நாட்டிற்கு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொம்மைகள், பட்டாசுகள், எலக்ட்ரானிக் பொருள்கள் உள்ளிட்டவற்றிற்கு தடை விதிக்க வேண்டும். ஹாங்காங் தன்னாட்சி சட்டத்தை நீக்கும் சீனக் கம்யூனிஸ்ட் அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவிக்கிறோம்.
திபெத் மக்களின் சுதந்திரம், கலாசாரம், பண்பாடு, மொழி ஆகியவற்றை அழிக்கும் சீன கம்யூனிஸ்டுகளிடமிருந்து தீபத்தை பாதுகாக்க வேண்டும். புனிதத்தலமான மானசரோவர் ஏரி மற்றும் திருக்கைலாய மலையை சீனா ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டு இந்தியாவிற்கு சொந்தமாக்க வேண்டும்.
கரோனா வைரஸை பரப்பிவிடும் சீனா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். சிக்கிம், பூட்டான் எல்லைப்பகுதிகளில் சீனாவின் அத்துமீறலை முறியடிக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் சீனாவிற்கு ஆதரவாக செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சிகள், நக்சல் அமைப்புகளை தடை செய்ய வேண்டும். அருணாசலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடும் சீனாவை ஐநா உறுப்பு நாடுகள் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.
சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் ஆதரவாக செயல்படும் ஊடகங்கள் மீது தடை விதிக்க வேண்டும்" என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தன.