திருவண்ணாமலை முத்து விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனகவள்ளி(80). பத்து ஆண்டுகளுக்கு முன்பே கணவரை இழந்த இவர், தனியாக வசித்து வந்துள்ளார்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் உணவுக்கு வழியின்றி பசியால் வாடி வந்த கனகவள்ளி, கடந்த மூன்று நாட்களாவே வீட்டின் கதவை பூட்டியபடி உள்ளே இருந்ததாக கூறப்படுகிறது. வீட்டில் அவரது நடமாட்டம் இல்லாததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் வீட்டில் சென்று பார்த்தபோது, அவர் படுத்த படுக்கையாக இறந்து கிடந்தது தெரியவந்தது.

பின்பு இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நகராட்சி ஊழியர்கள், காவல் துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக மூதாட்டிக்கு அக்கம் பக்கத்தினர் உணவு வழங்கி வந்ததாகவும், ஊரடங்கால் உணவு வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டதாகவும் தெரிகிறது. இச்சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; நளினி, முருகன் தாக்கல்செய்த வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் குட்டு!